உள்நாட்டு செய்திகள்

ஊடகவயிலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றை நிறுவப்படும் – ஊடக அமைச்சர்

ஊடகவயிலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்று ஆரம்பிக்கப்படும் என ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

ஊடக அமைச்சில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சீன அரசாங்கத்துடன் இணைந்து இந்த ஊடகப் பயிற்சி நிறுவனம் ஆரம்பிக்கப்பட உள்ளது. சீனாவிற்கு விஜயம் செய்திருந்த போது குறித்த இந்த நிறுவனத்தை அமைப்பதற்கான உதவிகளை வழங்க இணக்கம் காணப்பட்டது.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரிடம் அறிவிக்கப்பட்டது.
ஊடகவியலாளர்களுக்கு பயிற்சி அளிக்கும் நிறுவனமொன்றை ஆரம்பித்து பயிற்சி வழங்குவது மிகவும் அவசியமானது.

பயிற்சி நிறுவனம் அமைப்பது குறித்து அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் கயந்த கருணாதிலக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

தனி ஒழுங்கை முறைமையினை பேருந்து சங்கம் மீளவும் கோருகிறது…

wpengine

சுதத் சமரவீரவுக்கு திடீர் இடமாற்றம்

wpengine

அதிக வெப்பத்துடனான வானிலை நிலவும்…

wpengine