உள்நாட்டு செய்திகள்

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரது இறுதிக்கிரியை ஞாயிறன்று (UPDATE)

காலமான அத்ததஸ்ஸி தேரரது இறுதி கிரியை 13 ஆம் திகதி கண்டி கவற்துறை மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இன்று காலை ஒன்று கூடிய தேரர் குழுவில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தம்மாநந்த தேரர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

 

அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரரது தேகம், அஞ்சலிக்காக அஸ்கிரிய விகாரையில்..

காலமான அத்ததஸ்ஸி தேரரது தேகம், இன்று(10) காலை அஸ்கரிய விகாரையில் அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளது.

அத்ததஸ்ஸி தேரரது இறுதி சடங்கு தொடர்பான தினம் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதாக மெதகம தம்மாநந்த தேரர் எமது செய்தி பிரிவிற்கு தெரிவித்தார்.

வணக்கத்துக்குரிய அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர் கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் நேற்று(09) காலமானார்.

கலகம ஶ்ரீ அத்ததஸ்ஸி தேரர் கீழே விழுந்ததன் காரணமாக சுயநினைவு அற்றநிலையில் நேற்று கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் சிகிச்சை பலனளிக்காத  நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை கடந்த 2015ம் ஆண்டு மே மாதம் கலகம அத்ததஸ்ஸி தேரர் அஸ்கிரி பீடாதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உடுகம சிறி புத்தரக்கித்த தேரர் காலமானதன் பின்னர் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு அத்ததஸ்ஸி தேரர் நியமிக்கப்பட்டிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஆகஸ்ட் வரை ஒத்திவைப்பு

wpengine

தனி ஒழுங்கை முறைமையினை பேருந்து சங்கம் மீளவும் கோருகிறது…

wpengine

அதிநவீன தொழில்நுட்ப துறையில் தெற்காசியா நாடுகளை விட இலங்கையே உயர்ந்த இடம் – அமைச்சர் ரிஷாட்

wpengine