ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

காரைநகரில் பனங்கிழங்குச் சண்டையால் பறிபோன உயிர்!

பனங்கிழங்கு பிடுங்குவதில் ஏற்பட்ட சண்டையால் பரிதபகராமாக பெண் ஒருவர் உயிரிழந்தார். காரைநகர் கல்வன்தாழ்வுப் பகுதியிர் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கடந்த 4ம் திகதி வெள்ளிக்கிழமை இறந்த பெண்ணான 56 வயதான சின்னத்துரை தவமணிதேவிக்கும் தங்கையின் கணவருக்கும் இடையில் பனங்கிழங்கு பிடுங்குவதில் ஏற்பட்ட சண்டையில் தங்கையின் கணவரான யோகராசா ஜெயராசா பனங்கிழங்கு பிடுங்கிக் கொண்டிருந்த மண்வெட்டியால் தவமணிதேவியின் தலையைத் தாக்கியதாகத் தெரியவருகின்றது.

இதனால் அந்த இடத்திலேயே மயக்கமடைந்த தவமணிதேவி காரைநகர் பிரதேசவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தார்.10 நாட்கள் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்த தவமணி தேவி சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

இதனையடுத்து யாழ் நீதிமன்ற நீதவான் சதீஸ்கரன் விசாரணைகளை மேற்கொண்டார். தவமணிதேவியைத் தாக்கிய ஜெயராசா தற்போது தலைமறைவாக உள்ளதாகவும் அவரை ஊர்காவற்துறைப் பொலிசார் தேடிவருவதாகத் தெரியவருகின்றது

Related posts

இறுதிச்சடங்கில் உயிர் பிழைத்த நபர்: உறவினர்கள் ஷாக்

wpengine

மஹிந்தவுக்கு 196 – மைத்திரிக்கு 04..! செலவோ 92 மில்லியன்

wpengine

ஹலால் இலட்சினை தேவையில்லை SLS மாத்திரம் போதுமானது

wpengine