உள்நாட்டு செய்திகள்

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து விற்பனை செய்யவிருந்த பாரியளவு பாபுல் சிக்கியது

பாடசாலை மாணவர்களிடம் விற்பனை செய்வதற்காக கொண்டுவரப்பட்டதாக கூறப்படும் போதை பொருள் கலந்த பாபுல் தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைப்பற்றப்பட்டுள்ளது.

விமான நிலைய சுகாதார பணியகத்தினால் நேற்று இது கைப்பற்றப்பட்டுள்ளது.

மாலைத்தீவு, இந்தியா, பாகிஸ்தான் மற்றும் குவைட் நாடுகளில் இருந்து குறித்த பாபுல் தொகை இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்தே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்டுள்ள பாபுல் தொகையின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னர் இறக்கமதி செய்யப்பட்டுள்ள பாபுல், பாடசாலை அருகில் உள்ள விற்பனை நிலையங்களில் விற்கப்பட்டு வந்துள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

வரிச் சட்டங்களை திருத்த அனுமதி

News Editor

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்…

wpengine

08 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை…

wpengine