விளையாட்டு

தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி இலங்கை அணி அசத்தல் வெற்றி

உலகக் கிண்ண டி20 பெண்களுக்கான போட்டியில் நேற்று தென் ஆப்பிரிக்கா மற்றும் இலங்கை அணிகள் மோதின.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது.

இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 114 ஓட்டங்கள் எடுத்தது. அந்த அணியில் தலைவர் ஜெயங்கானி 52 ஓட்டங்கள் எடுத்து அசத்தினார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் காப் மற்றும் லூஸ் இரு வீராங்கனைகளும் தலா 2 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.

பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 104 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. தொடக்க வீராங்கனைகளான நியேகெர்க் 24 ஓட்டங்களும், செட்டி 26 ஓட்டங்களும் எடுத்தனர். மற்றவர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். இதனால் இலங்கை அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த இலங்கை அணி வீராங்கனை ஜெயங்கானி ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளும் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெறவில்லை.

இதனிடையே, ஆண்கள் பிரிவில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் இலங்கை அணி தோல்வியுற்றதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ராபாடாவுக்கான போட்டித்தடை நீக்கம்..

wpengine

ஒருநாள் போட்டிகளின் தரவரிசை பட்டியலினை வெளியிட்டது ICC..

wpengine

இலங்கை அணியானது, முதல் இன்னிங்ஸில் 144 ஓட்டங்களுடன் சுருண்டது..

wpengine