உள்நாட்டு செய்திகள்

ஊவா மாகாண முதல் அமைச்சருக்கு எதிராக சமந்த ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு

ஊவா மாகாணத்தின் முதல் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்கவினால் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படும் ஊழல் முறைகேடுகள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை தாக்கல் செய்யவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் ஊவா மாகண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;

ஊவா மாகாணத்தின் முதல் அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க பதவி விலக வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணியின் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்தியாரத்ன கடந்த 25 ஆம் திகதி குறிப்பிட்டார்.

இதன்போது, பதுளை – ஹாலிஎல பிரதேசத்தில் அன்றைய தினத்தில் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது முதல் அமைச்சர், தான் முதல் அமைச்சர் பதவி விலக வேண்டுமாயின் நீதி மன்றத்தில் குற்றவாளியாக தீர்ப்பளிக்கப்பட்டு சிறைத் தண்டனை நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

சமந்த வித்தியாரத்ன கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதுளையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பல விடயங்களை சுட்டிக்காட்டியதற்கு அமைவாக, முதல் அமைச்சர் மற்றும் மாகாண சபை உறுப்பினர் சமந்த வித்யாரத்னவுக்கும் இடையில் வாக்குவாதங்கள் ஆரம்பித்துள்ளன.

Related posts

அமைச்சர் ஹகீமிற்கு எதிராக வலுப்பெறுகிறது விசாரணை

wpengine

பசிலை சிறையில் அடைக்க வேண்டும்; தேரர் போர்க்கொடி

wpengine

அரிசி விலையில் ஏற்பட்ட அதிகரிப்பு: கடும் அதிருப்தியில் மக்கள்

Azeem Kilabdeen