உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

போர்ட் சிட்டி நிர்மாணம் தாமதித்தால் இலங்கைக்கே நஷ்டம் – மஹிந்த

போர்ட் சிட்டி நிர்மாணம் தாமதிப்பால் எமது நாடே அதிகம் நஷ்டத்தை எதிர்கொள்ள நேரிடும் கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தத் திட்டத்தினால் பாதிப்படைந்த மீனவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவுள்ளதாகவும், குறித்த மீனவர்கள் தொடர்பான தகவல்கள் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் போர்ட் சிட்டி நிர்மாணப் பணிகள் மேலும் மேலும் தாமதமாகும் சந்தர்ப்பத்தில் இலங்கைக்கே பாதகம் என்றும் தெரிவித்துள்ள அமைச்சர், இந்தத் திட்டத்திற்கான தாமதக் கட்டணத்தையும் எமது நாடே செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

மேலும் குறித்த திட்டத்தினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பிரதேசவாசிகளை தெளிவுபடுத்தும் நிகழ்வு ஆரம்பமாகியுள்ளதாகவும், இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் தமது தொழிலுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

சுகாதார இராஜாங்க அமைச்சரின் ஆலோசகராக டாக்டர். எச்.எம்.ரபீக் நியமனம்…

wpengine

அரச நிறுவனங்களுக்கு இனி வாகன கொள்வனவு இல்லை – நிதியமைச்சர்

wpengine

தொல்பொருள் : இனச் சச்சரவுக்கு வழிகோலக் கூடாது.

wpengine