உள்நாட்டு செய்திகள்

சிசிலியாவுக்கு பிணை

கோல்டன் கீ நிறுவனத்தின் ஊடாக நிதி மோசடி செய்ததாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிசிலியா கொத்தலாவல நேற்று(31) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி மணிலால் வைத்தியதிலக்க, சிசிலியா கொத்தலாவலவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.

தலா 10 லட்சம் ரூபா பெறுதியான இரண்டு சரீர பிணையில் அவர் விடுதலை செய்யப்பட்டதுடன் அரச நிறைவேற்று அதிகாரி மற்றும் நெருங்கிய உறவினர் பிணை வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இதற்கு முன்னர், சிசிலியா கொத்தலாவல பிணை கோரி விண்ணபித்திருந்ததுடன் பிணை நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்படாத காரணத்தினால், நிராகரிக்கப்பட்டிருந்தது.

சிசிலியா கொத்தலாவலவுக்கு எதிரான வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 27 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Related posts

பொதுமைதானம் கோரி பொத்துவிலில் பேரனி..!

wpengine

அலுவலக ரயில்கள் வழமையான அட்டவணை பிரகாரம் சேவையில்

wpengine

டெனிசன் குரே காலமானார்

wpengine