உள்நாட்டு செய்திகள்

இலங்.ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவை தனியார் துறையிடம்…

ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை தனியார்த்துறையினருக்கு வழங்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கையெடுத்து வருவதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த இந்த திட்டமானது ரயில்வே துறையினரை தனியார் மயப்படுத்துவதற்கான ஆரம்பம் என சங்கத்தின் பிரதான செயலாளர் எஸ் பீ விதானகே மேலும் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவைத்துறையில் ஏராளமான வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளதோடு,  தனியார் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையினை கையளிக்க ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை ரயில்வே ஊழியர்களின் பொதுச் சேவைகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை தாம், தனியார் துறையினரை ரயில்வே உதவிப் பாதுகாப்பு சேவையில் இணைப்பது தொடர்பில் கலந்துரையாடல்களை மாத்திரமே மேற்கொண்டதாக போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க கூறினார்.

அத்துடன், இது குறித்து இறுதித் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் மேலும் கூறினார்.

Related posts

Update – தம்புத்தேகம ஆர்ப்பாட்டத்தில் சுமார் 40 பேர் கைது… (VIDEO)

wpengine

முஸ்லிம் சமூகம் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

wpengine

பயணக்கட்டுப்பாடுகளை நீடிக்க பரிந்துரைகள் இல்லை

wpengine