உள்நாட்டு செய்திகள்

FCIDற்கு வாக்குமூலம் அளிக்க வருமாறு யோஷிதவுக்கு நீதிமன்றம் ஆணை

சீ.எஸ்.என் தொலைக்காட்சி நிறுவனம் தொடர்பான நிதி மோடிசடி விவகாரம் தொடர்பில், எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி முதல் இரண்டு வாரக் காலப்பகுதிக்குள், கொழும்பு – கொள்ளுபிட்டியில் அமைந்துள்ள நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவுக்குச் சென்று வாக்குமூலம் அளிக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தினால், யோஷித ராஜபக்ஷ மற்றும் நிஷாந்த ரணதுங்க உள்ளிட்ட, ஐவருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு விசாரணையை, எதிர்வரும் மே 5ஆம் திகதிக்கு ஒத்திவைத்த கடுவெல பதில் நீதவான் ஹேமந்த வெத்தசிங்க, நீதிமன்றம் அழைப்பாணை விடுக்கும் போது நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு, மேற்படி ஐந்து சந்தேகநபர்களுக்கும் ஆணையிட்டுள்ளார்.

Related posts

நாட்டில் நிலவும் காற்றுடன் கூடிய மழை நிலைமை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும்

wpengine

வனவளத்துறை அதிகாரிகள் இன்று(23) தொழிற்சங்க நடவடிக்கையில்..

wpengine

HNDA மாணவர்களது ஆர்ப்பாட்டம் காரணமாக வாகன நெரிசல்

wpengine