உள்நாட்டு செய்திகள்

கிளிநொச்சி சிறைச்சாலைக் காணியிலிருந்து இராணுவம் வெளியேற்றம்

கிளிநொச்சி, சிறைச்சாலைக்குரிய காணியில் தங்கியிருந்த இராணுவத்தினர், அந்தக் காணியை விடுவித்து வெளியேறியுள்ளனர். சிறைச்சாலைக்குச் சொந்தமான சுமார் 2 ஏக்கர் அளவிலான இந்தக் காணியில் கடந்த 2010ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து 2011ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் வரையில் கிளிநொச்சி நீதிமன்றம் இயங்கியது.

புதிய நீதிமன்ற கட்டடம் கட்டப்பட்டு, 2011ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் நீதிமன்றம் இடமாற்றம் செய்யப்பட்ட பின்னர் அக்காணியை இராணுவத்தினர் தங்கள் தேவைக்கு பயன்படுத்தினர். அதில் சிறிய காவலரண் அமைந்திருந்ததுடன், இராணுவ வாகனங்களை தரித்து வைப்பதற்கு அந்தக் காணியை இராணுவத்தினர் பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், தற்போது அந்தக் காணியை விட்டு வெளியேறியுள்ளனர்.

Related posts

மேலும் 306 பேர் கைது

wpengine

10000/- வழங்கப்படுவதாக பரவும் தகவல் பொய்!

Azeem Kilabdeen

இலங்கையின் தடையும் இந்தியாவின் பயமும்

wpengine