உள்நாட்டு செய்திகள்

விமல் வீரவன்சவை மீள் நீதிமன்றில் ஆஜராக உத்தரவு

இரண்டு கடவுச்சீட்டுக்களை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முற்பட்ட சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக தொடுக்கப்பட்டிருந்த வழக்கில் அவரை ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று இடம்பெற்றது.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவை எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 8ம் திகதி நீதிமன்றில் மீண்டும் ஆஜராகுமாறு நீர்கொழும்பு நீதவான் ருச்சிர வெலிவத்த உத்தரவிட்டுள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் குற்றப்பத்திரிகை ஒன்றும் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கையளிக்கப்பட்டது.

Related posts

கட்டுப்பாடுகளை தளர்த்த நடவடிக்கை

wpengine

தனிமைப்படுத்தல் நீக்கப்படவுள்ள பகுதிகள்

wpengine

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

wpengine