விளையாட்டு

கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இணைந்த அதிரடி ஆட்டத்தில் வென்றது ரோயல் செலஞ்சர்ஸ்

ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களுர் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகளுக்கு இடையிலான 44 ஆவது ஐ.பி.எல் கிரிக்கட் போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 144 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூர் அணியின் தொடக்க வீரரான கெய்ல் 6 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய டிவில்லியர்ஸ் மற்றொரு தொடக்க வீரரான அணித்தலைவர் கோஹ்லியுடன் சேர்ந்து குஜராத் அணியின் பந்துகளை சிதறடித்தனர்.

கோஹ்லி 55 பந்தில் 109  ஓட்டங்களை 5 பவுண்டரி, 8 சிக்சர் உள்ளடங்களாக பெற்று கொண்டார்.

டிவில்லியர்ஸ், ஆட்டமிழக்காமல் 52 பந்தில் 10 பவுண்டரி, 12 சிக்சர்களுடன் சதம் விளாசி 129 ஓட்டங்களை குவித்தார்.

20 ஓவர் முடிவில் 3 விக்கட் இழப்பிற்கு பெங்களூர் அணி 248 ஓட்டங்கள் குவித்தது.

கோஹ்லி மற்றும்  டிவில்லியர்ஸ் இணைந்து 229 ஓட்டங்களை பெற்று கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கிண்ணத்தினை வெல்வது யார்?

wpengine

இந்தியாவுடன் எந்த இடத்திலும், எந்த நேரத்திலும் விளையாட அப்ரிடி விருப்பம்

wpengine

முதல் ஒருநாள் போட்டி இரத்து

wpengine