உள்நாட்டு செய்திகள்

தாஜூடின் கொலை – இரகசிய வாக்கு மூலம் அளித்தார் பொலிஸ் பரிசோதகர் சரத்சந்திர

றகர் வீரர் வஸீம் தாஜூடின் கொலை குறித்து நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் போக்குவரத்து பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, வெல்லால ஆராச்சிகே சரத்சந்திர நீதவானிடம் இரகசிய வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.

கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் முன்னிலையில் நேற்று இவ்வாறு இரகசிய வாக்கு மூலம் ஒன்றை அளித்துள்ளார்.

சரத்சந்திர தற்போது பாணந்துறை மோட்டார் போக்குவரத்துப் பிரிவின் பொறுப்பதிகாரியாக தற்போது கடமையாற்றி வருகின்றார்.

பல சந்தர்ப்பங்களில் ஏற்கனவே சரத்சந்திரவை அழைத்து புலனாய்வுப் பிரிவினர் வாக்கு மூலங்களை பதிவு செய்திருந்தனர்.

இது குறித்த மேலதிக அறிக்கைகளை புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளனர்.

இந்த விசாரணைகளுக்கு சரத்சந்திரவின் எவ்வித ஒத்ழைப்பும் வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

எனினும், உயர் அதிகாரிகளின் அழுத்தங்கள் காரணமாக போலி அறிக்கை ஒன்றை சமர்ப்பித்ததாக சரத்சந்திர வாக்கு மூலத்தில் கூறியதாக புலனாய்வுப் பிரிவினர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.

Related posts

உரிமம் இல்லாத பேருந்துகளை தேடி நாடு முழுவதும் சோதனை..!

wpengine

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி.

wpengine

249ஐ வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணியினர்

wpengine