உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

காணாமல் போனோர் தொடர்பில் அலுவலகம் ஒன்றை திறக்க அமைச்சரவை நேற்றையதினம்(25) அனுமதி வழங்கியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

காணாமல் போனோரின் பெற்றோர்கள் விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அலுவலகம் அமைக்கப்படவுள்ளது

இதன்மூலம் காணாமல் போனோரின் குடும்பங்களை மீண்டும் இணைத்தல் மற்றும் நிவாரணங்களை வழங்குதல் போன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என்றும் குறித்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தேசிய கொள்கை மற்றும் பொருளாதார அமைச்சர் என்ற வகையில் பிரதமர் முன்வைத்த குறித்த யோசனைக்கே அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சுற்றாடல் அதிகாரிகள் 156 பேர் நியமனம்…

wpengine

மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்

wpengine

சட்டமா அதிபர் அழைப்பு

wpengine