உள்நாட்டு செய்திகள்

கோத்தபாயவின் அடிப்படை உரிமை மீறல் மனு ஒத்திவைப்பு

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனு ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

தம்மை கைது செய்வதனை தடுக்குமாறு கோரி கோத்தபாய ராஜபக்ஷ அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

குறித்த  மனுவை எதிர்வரும் ஒக்ரோபர் மாதம் 3ம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வது என உச்ச நீதிமன்றம் நேற்றையதினம்(26) தீர்மானித்துள்ளது.

இன்னும், இந்த மனுவின் பிரதிவாதிகள் பட்டியலில் திருத்தம் செய்வதற்கும் உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதியளித்துள்ளது.

தம்மை கைது செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்படுவதனை தடுக்க இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரி கோத்தபாய ராஜபக்ஷ  அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

வானளவில் உயரும் மரக்கறி மற்றும் அத்தியவசியப்பொருட்கள்

wpengine

இதுவரை 9, 885 பேர் கைது

wpengine

மதூஷின் உறவினர் உட்பட 06 பேர் இலங்கைக்கு…

wpengine