உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச நியமனங்கள் வழங்கியமை குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி

கடந்த அரசாங்கத்தில் பணியாற்றிய அரச அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு மீண்டும் அரச நியமனங்களை வழங்கியுள்ளமை குறித்து தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அரச அதிகாரத்தையும் அரச வளங்களையும் துஷ்பிரயோகம் செய்ய அனுசரணைகளை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக சட்டம் அமுல்படுத்தப்பட்டு வரும் நிலையில், அவர்களுக்கு மீண்டும் அரச சேவையில் நியமனங்களை வழங்கியுள்ளமை தொடர்பில் கண்காணிப்பு அமைப்புகள் தாம் எதிர்ப்பை வெளியிடுவதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹான ஹெட்டியாராச்சி கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

குற்றச்சாட்டுக்களை எதிர்நோக்கியுள்ள அதிகாரிகளுக்கு மீண்டும் நியமனங்களை வழங்குவது பாரதூரமான விடயமாக நாம் காண்கின்றோம் எனவும் தெரிவித்திருந்தார்.

 

Related posts

ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிப் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமர் இடையில் சந்திப்பு…

wpengine

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை இன்று

wpengine

கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் வைத்தியசாலையில்..!

wpengine