உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

நாடளாவிய ரீதியில் நாளை பணிபகிஷ்கரிப்பு போராட்டத்தில் அரச வைத்தியர்கள்

வைத்தியர்கள் நியமனம் தொடர்பில் இடம் பெறுவதாக கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாளை நாடளாவிய ரீதியில் பணிப் பகிஸ்கரிப்பை மேற்கொள்ளவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் நவின் சொய்சா  இன்று(30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தொிவித்துள்ளார்.

எனினும், அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கம்பஹா, கேகாலை ஆகிய மாவட்டங்கள் மற்றும் சிறுநீரக நோயாளர்களின் விடுதி, புற்றுநோய் வைத்தியசாலை, காசல் வைத்தியசாலை உள்ளிட்ட அத்தியவசிய வைத்தியசாலைகளில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என,  அவா் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, நாளை காலை 08.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை இவ்வாறு அடையாளப் பணிப் பகிஸ்கரிப்பு இடம்பெறும் என அவர் தொிவித்துள்ளார்.

Related posts

பன்னிப்பிட்டிய சம்பவம் : லொறி சாரதி கைது

wpengine

சீனாவிற்கு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை குத்தகைக்கு வழங்கும்  திருத்த உடன்படிக்கைக்கு அமைச்சரவை அனுமதி

wpengine

கொரிய மொழி தேர்ச்சிப் பரீட்சைக்கான விண்ணப்ப விநியோகம் இன்று ஆரம்பம்…

wpengine