உள்நாட்டு செய்திகள்வணிகம்

எலிபன்ட் ஹவுஸ் ஐஸ் கிறீம் நிறுவன உரிமை அரசுக்கே உரித்தது – சரவணபவன்

எலிபென்ட் ஹவுஸ் (Elephant House) ஐஸ் கிறீம் அரசாங்கத்தினுடையது. அதற்கு தனி நபர்கள் விநியோகஸ்தர்கள் ஆக முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் செவ்வாய்க் கிழமை காலை யாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

அதில் பொது சுகாதார பரிசோதகர்களால் தொழில் முயற்சியாளர்கள் பாதிக்கபடுகின்றார்கள். சிறு சிறு விடயத்திற்கு எல்லாம் வழக்கு தாக்கல் செய்கின்றார்கள்  லஞ்சம்  வாங்குகின்றார்கள் என கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பல குற்றசாட்டுக்களை திடீர் மரண விசாரணை அதிகாரி மு.உதயசிறி முன்வைத்தார்.

அதற்கு யாழ்.போதனா வைத்திய சாலை பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். ஒரு கூட்டத்தில் என்னை போன்ற அரச அதிகாரிகள் தொடர்பில் கடுமையான வார்த்தைகளை பிரயோகித்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார். அதட்டி கதைக்கின்றார்.

அதனை தொடர்ந்து கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் ஈ. சரவணபவன் , நீரில் ஈக்கோளின் இருக்கின்றது என அதற்கான ஆதாரங்களை வைத்துக்கொண்டே பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டது.

அதற்கு அந்த செய்தியினை நானே திட்டமிட்டு பிரசுரித்ததாகவும் , நான் எலிபென்ட் ஹவுஸ் ஐஸ் கிறீமின் வடமாகாண விநியோக உரிமையை பெற்றுக் கொண்டதனால் தான் அவ்வாறான செய்தி பிரசுரிக்கப்பட்டது என தற்போது பொது சுகாதார பரிசோதகர்களை குற்றம் சாட்டியுள்ள இந்நபர் எனக்கு எதிரான பொய் பிரச்சாரங்களை மேற்கொண்டார்.

எலிபென்ட் ஹவுஸ் ஐஸ் கிறீம் அரசாங்கத்தின் உடையது. அதன் விநியோக உரிமையினை  தனியார் பெற்றுக்கொள்ள முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஜனாதிபதி கோட்டா பெண்களுக்கு பயமா? ஹிருணிகா நடு வீதியில் வைத்து கோஷம்!

wpengine

ஊடகவயிலாளர்களை பயிற்றுவிக்கும் நிறுவனமொன்றை நிறுவப்படும் – ஊடக அமைச்சர்

wpengine

உக்ரைன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு

wpengine