ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

குட்டி போடும் பூனைகளுக்கு கட்சியில் இடமில்லை – துமிந்த அறைகூவல்

கோத்தபாய ராஜபக்ஷவை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இணைத்துக் கொள்ளவுள்ளதாக வெளியான தகவல் பொய்யானது என கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸநாயக்க தெரிவித்துள்ளார்.
“ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைவராக கோத்தபாய ராஜபக்ஷவை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக வெளியான தகவல்களில் எவ்வித அடிப்படையும் கிடையாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இரண்டாம் நிலைத் தலைமைகளை பொறுப்பேற்றுக் கொள்ள போதியளவு இளைஞர்கள் இருக்கிறார்கள்.
இரண்டாம் நிலை தலைவர் ஒருவரை கட்சிக்கு வெளியே இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஜனவரி மாதம் 8ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஷ குடும்ப ஆட்சியிலிருந்து நாட்டை மட்டுமன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியையும் மீட்டு எடுத்திருந்தார்.
இன்று சுதந்திரக் கட்சியின் உள்ளக ஜனநாயகம் நிலைநாட்டப்பட்டுள்ளது. இனி வரும் காலங்களில் கட்சியில் குடும்ப மரங்களை உருவாக்கிக் கொள்ள எவருக்கும் இடமளிக்கப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

இந்த அரசாங்கம் பெண்களை உதாசீனம் செய்கின்றது [VIDEO]

wpengine

ஜீவன் மென்டிஸ் இருபதுக்கு – 20 போட்டியில் முன்னணியில்…

wpengine

உடலுறுப்புக்காய் போராடும் 8 வயது சிறுமி

wpengine