உள்நாட்டு செய்திகள்

பிள்ளையானுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுப்பு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தனுக்கு மட்டக்களப்பு மேல் நீமன்ற நீதிபதி சந்திரமணி சிவபாதம் பிணை வழங்க இன்று வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்துள்ளார்.

அவரது பிணை மனுவை 21.7.2016 வரை ஒத்திவைத்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

கடந்த 25.12.2015 அன்று மட்டக்களப்பு மரியாள் தேவாலயத்தில் நத்தார் ஆராதனையில் ஈடுபட்டிருந்த ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இக் கொலைச் சம்பவம் தொடர்பாக பிள்ளையான் உட்பட மேலும் நால்வர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

பாராளுமன்றில் சபாநாயகர் தலைமையில் கட்சித் தலைவர்கள் கூட்டம்

wpengine

ஐந்தாவது முறையாகவும் இஸ்ரேலிய பிரதமராக பெஞ்சமின்…

wpengine

சஜினுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு வழக்கு

wpengine