உள்நாட்டு செய்திகள்

இலங்கை விடயத்தில் ஐரோப்பிய ஒன்றியம் சிவப்பு சமிஞ்சை.

இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான உள்ளக விசாரணைக்கு, சர்வதேச நீதிபதிகளை வலியுறுத்தப் போவதில்லையென ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்திருந்ததாக அண்மையில் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், குறித்த செய்தியை ஐரோப்பிய ஒன்றியம் மறுத்துள்ளது.

இருதரப்பினராலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீதி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஐ.நா ஆணையாளரின் இலங்கை தொடர்பான யோசனைக்கு ஏலவே ஆதரவு வழங்கியிருந்ததாகவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான நிர்வாகி போல் கோட்பிரே மேலும், தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் உள்ளக விசாரணையில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டுமென்ற தமது நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லையெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், விசாரணை பொறிமுறை குறித்த இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் போல் கோட்ப்ரே மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி

wpengine

தமிழீழம் விக்கிப்பீடியாவில் – தலைநகராக திருகோணமலை.

wpengine

7000 சமூர்த்தி உத்தியோகத்தர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்…

wpengine