உள்நாட்டு செய்திகள்

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் காவற்துறை மா அதிபரிடம் முறைப்பாடு

இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்றையதினம் காவற்துறை மா அதிபரிடம் முறைப்பாடு ஒன்றை முன்வைத்தனர்.
பயணிகள் பேரூந்து சேவைகள் இடம்பெறுகின்ற வீதிகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகள் இடம்பெறுவதால், பொதுப் போக்குவரத்தை தம்மால் நடத்த முடியாதிருப்பதாக அவர்களின் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான பேரணிகள் மற்றும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்குமாறும் அவர்களின் குறித்த கோரிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பில் இன்று நீர்வெட்டு

Azeem Kilabdeen

நாட்டில் அதிகரிக்கும் கொரோனா நோயாளர்கள்

wpengine

பிரசன்ன ரணதுங்கவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது பொதுபல சேனா அமைப்பு..

wpengine