உள்நாட்டு செய்திகள்

தென் மாகாண சபையில் அமளிதுமளி – சபை அமர்வுகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைப்பு

தென் மாகாண சபை அமைச்சர் டீ.வி.உபுலை அப்பதவியில் இருந்து நீக்கியமைக்கு எதிர்ப்பு வௌியிடும் வகையில் சபையின் உறுப்பினர்கள் குழுவொன்று இன்று கறுப்புப் பட்டி அணிந்து எதிர்ப்பை வௌியிட்டமையால் சபை அமர்வுகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கறுப்புப் பட்டி அணிந்து வந்தவர்கள், மாகாண சபை செயற்பாடுகளைக் குழப்பும் வகையில் செயப்பட்டதால், சபையை ஒத்திவைக்க அதன் தலைவர் சோமவங்க கோதாகொட தீர்மானித்ததாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தென் மாகாண சபையின் உறுப்பினர் டீ.வி.உபுல் வசம் இருந்த மீன் பிடி உள்ளிட்ட சில அமைச்சுக்களை எச்.டப்ளியூ.குணசேனவிடம் கையளிக்க, அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் நடவடிக்கை எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முத்துராஜவலவில் குப்பைகள் கொட்டுவதற்கான தடை உத்தரவு நீடிப்பு

wpengine

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு 10 வருடங்களுக்கான தற்காலிய பயணிகள் முனையம்…

wpengine

கொழும்பில் 12 மணித்தியால நீர்வெட்டு

wpengine