உள்நாட்டு செய்திகள்

கீதா குமாரசிங்கவின் இரட்டைக் குடியுரிமை குறித்த ரிட்மனு மீள் விசாரணைக்கு.

நாடாளுமன்ற உறுப்பினர் கீதா குமாரசிங்கவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ரிட்மனு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த ரிட்மனுவானது, மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர், விஜித மலல்கொட உட்பட நீதிபதிகள் குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டுள்ளது.

அவர் இதுவரை அவரது இரட்டைக் குடியுரிமையை நீக்கி கொண்டதாக உறுதிப்படுத்தப்பட்ட எந்தவொரு ஆவணங்களை முன்வைக்கவில்லை என மனுதாரர் தரப்பில் முன்னிலையான சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

இரட்டைக் குடியுரிமையாளர்களுக்கு நாடாளுமன்ற உறுப்பினராக செயற்பட முடியாததனால் இது குறித்த உத்தரவை பிறப்பிக்குமாறு அவர்கள் கோரியுள்ளனர்.

இந்த விடயங்களை ஆலோசித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், மேலதிக விசாரணைகளை ஓக்டோபர் 24 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளது.

Related posts

புதிய அமைச்சர்கள் விபரம்…

wpengine

சஜின் அவரது மனைவிக்கு எதிராக நான்கு லீசிங் நிறுவனங்கள் வழக்குத் தாக்கல்

wpengine

மரணதண்டனையினை நிறைவேற்றல் குறித்து விரைவில் ஜனாதிபதியிடமிருந்து அறிவிப்பு

wpengine