உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மத்தள விமான நிலைய சேவை நடவடிக்கைகளுக்காக பங்குதாரர்கள் தேவை – போக்குவரத்து அமைச்சர்

மத்தள மஹிந்த ராஜபக்ஸ விமான நிலைய சேவை நடவடிக்கைகளுக்காக பங்குதாரர்கள் தேவைப்படுவதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த விமான நிலையத்தின் சேவைகளானது அரச மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், இதற்கமைய பங்குதாரர்கள் தேவைப்படுவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இன்று ஆசிய பசுபிக் பிராந்திய விமான சேவை பணிப்பாளர்களின் 53வது மாநாட்டில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த மாநாடானது இன்று முதல் 5ஆம் திகதி வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் எந்தவொரு விமான நிறுவனமும் வரையறை இல்லாமல் இதனை பயன்படுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

ரயில்வே திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

wpengine

அரசு பொதுமக்களுக்கு விசேட அறிவிப்பு

wpengine

இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழப்பு…

wpengine