உள்நாட்டு செய்திகள்

பரீட்சை முறைகேடுகள் குறித்து முறையிட புதிய மின்னஞ்சல் முகவரி.

பரீட்சை மண்டபங்களில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் முகவரி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சையின் முறைகேடுகள் தொடர்பில் முறையிட புதிய மின்னஞ்சல் முகவரியினை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதற்கமைய commissionerdoe.gmail.com என்ற மின்னஞ்சலினை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மேலும் குறித்த மின்னஞ்சல் மூலம் கிடைக்கும் முறைபாடுகளை 24 மணிநேரமும் ஆராய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்கள ஆணையாளர் எம்.என்.ஜே.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

அத்துடன் 1911 , 0112 784208 , 0112784537 , 119  என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாகவும் முறைபாடுகளை தெரிவிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பரீட்சை முறைகேடுகளை விரைவாக தெரிவிப்பதற்காகவே குறித்த மின்னஞ்சல் முகவரி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related posts

2019 – வரவு செலவுத்திட்டமானது, சர்வதேச நிறுவனங்களை திருப்திப்படுத்தும் திட்டமாகும் – அதுரலிய தேரர்..

wpengine

கட்டுநாயக்கவுக்கு வந்த சீன விமானம் மத்தளைக்கு அனுப்பிவைப்பு…

wpengine

இவ்வருட ஹஜ் பயணம் தொடர்பில் முடிவெடுக்க முன் மார்க்க அறிஞர்களுடன் கலந்துரையாடியிருக்க வேண்டும் – உலமா சபை.

News Editor