உள்நாட்டு செய்திகள்

தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்கள்.

தகவலறியும் உரிமை தொடர்பான ஆணைக்குழுக்கு இம்மாத இறுதிக்குள் உரிய அங்கத்தவர்களை நியமித்து ஆணைக்குழுவை நிறுவ வேண்டும் என அரசமைப்பு பேரவை தீர்மானித்துள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்ற கட்டடத்தொகுதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் அரசமைப்பு பேரவை கூடியபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தகவலறியும் உரிமைச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அரச நிர்வாக அமைச்சு ஆகியவற்றுக்கிடையில் சிறந்த தொடர்புகளை மேற்கொண்டு வியூகங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் அரசமைப்பு பேரவையின் பிரதிநிதிகள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர் என சபாநாயகர் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

Related posts

சட்டவிரோத மதுபானத்திற்கு பதிலாக புதிய வகை மதுபானம்!

Azeem Kilabdeen

இரண்டாயிரத்துக்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு

wpengine

மஹிந்தவின் பெயரை நீக்க மறுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க

wpengine