உள்நாட்டு செய்திகள்

தடைகள் வந்தாலும் போராட்டம் தொடரும் – BBS

எந்த வழிகளில் வழக்குத் தொடர்ந்தாலும் பௌத்த மதத்தை பாதுகாக்கும் போராட்டம் கைவிடப்படாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

தற்போது தென்கொரியாவிற்கு விஜயம் செய்துள்ள ஞானசார தேரர் கொழும்பு பத்திரிகையொன்றுக்கு தொலைபேசி மூலம் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்…

வழக்கு மேல் வழக்கு தொடர்ந்தாலும் பௌத்த மதத்தையும் நாட்டையும் இனத்தையும் பாதுகாக்கும் பொறுப்பிலிருந்து ஒரு நொடியும் விலகிக்கொள்ளப் போவதில்லை. எமக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படுகின்றது.

எனினும் பௌத்த மதத்திற்கு எதிராக அடிப்படைவாதிகளினால் மேற்கொள்ளப்படும் நெருக்கடிகள் தொடர்பில் பொலிஸாரோ அல்லது வேறும் தரப்பினரோ கண்டு கொள்வதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

வெகுஜன ஊடகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளராக சரித ஹேரத் நியமனம்…

wpengine

அரச நியமனங்கள் வழங்கியமை குறித்து பெப்ரல் அமைப்பு அதிருப்தி

wpengine

தனியார் வைத்தியசாலை கட்டணம் தொடர்பில் வரிச் சலுகை – பிரதமர்

wpengine