உள்நாட்டு செய்திகள்விசேட செய்தி

யானைத்தாக்கிய விபத்தில் 5 வயது பிள்ளையும் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு.

புத்தளம்- அநுராதபுரம் வீதியில் பயணித்துக்கொண்டிருந்த வான் ஒன்றை யானைத்தாக்கியதால், தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த 5 வயது பிள்ளையும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

யானைத்தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் பலி – 10 பேர் காயம்

புத்தளம்-அநுராதபுரம் பகுதியில் பயணித்த வானொன்றை காட்டு யானை தாக்கியதில், அதில் பயணித்த நபரொருவர் உயிரிழந்ததுடன், மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மீயாகொட பாலத்திக்கருகிலேயே இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த வேலாயுதம் தர்மராஜ் என்ற 39 வயதுடைய நபரே சம்பவத்தின் போது உயிரிழந்ததாகவும் காயமடைந்த அனைவரும் புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை உயர்வு [UPDATE]

wpengine

பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுமுறை!

Azeem Kilabdeen

லக்ஷ்மன் கதிர்காமர் கொலை வழக்கில் திடீர் உத்தரவு

wpengine