உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒலிம்பிக் இற்காக 46 அதிகாரிகள் பிரேசில் சென்றது ஏன்.. – அறிக்கை கோருகிறார் பிரதமர்

பிரேசிலில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிக்காக இலங்கையிலிருந்து சென்றிருந்த 46 அதிகாரிகள் தொடர்பாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இலங்கை ஒலிம்பிக் குழுவிடமிருந்து அறிக்கையொன்றை கோரியுள்ளார்.

ஒலிம்பிக் நிகழ்வுக்காக சென்றிருந்த அதிகாரிகள் தொடர்பாக பிரதமருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளை அடிப்படையாக கொண்டே அவர் குறித்த அறிக்கையை கோரியுள்ளார்.

இலங்கை சார்பாக 9 விளையாட்டு வீரர்களே கலந்துக்கொண்டிருந்த நிலையில் அவர்களுடன் 46 அதிகாரிகள் அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் எவ்வாறு அங்கு சென்றார்கள் என பிரதமர் விளக்கம் கோரியுள்ளார்.

 

Related posts

விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

wpengine

பனாமா பட்டியலிலிருந்து நவாஸ் ஷெரீபின் பெயர் நீக்கம்

wpengine

சபாநாயகர் மற்றும் பல்வேறு கட்சி தலைவர்கள் நாளை கண்டிக்கு விஜயம்…

wpengine