உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அனைத்து நலன்புரி நிலையங்களும் மூன்று மாதங்களுள் மூடப்படும் – ஜனாதிபதி.

உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் வாழ்ந்து வரும் அனைத்து நலன்புரி நிலையங்களும் மூன்று மாதங்களில் மூடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று(02) இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை மக்கள் காணிகளை இனங்கண்டு அடையாளப்படுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

அதுமாத்திரமன்றி வடக்கு மாகாண மக்கள் தமது சொந்த காணிகளையே கேட்கின்றார்கள் எனவும் மாறாக இராணுவம் வசமுள்ள காணிகளை அல்ல எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நான் ஓய்வில்தான் இருக்கிறேன், அரசியலில் இருந்து விலகவில்லை, மீண்டும் அரசியலுக்கு வருவேன்..!

wpengine

பிரசாந்தனின் விளக்கமறியல் நீடிப்பு

wpengine

இந்தியாவின் ஜீ தமிழ் சரிகமப நிகழ்வின் வெற்றியாளர் கில்மிஷாவை நேரில் அழைத்து பாராட்டி செல்பியும் எடுத்த ஜனாதிபதி ரணில்..!

wpengine