உள்நாட்டு செய்திகள்

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் கபில நியமனம்.

இலங்கை விமானப்படையின் புதிய தளபதியாக எயார் மார்ஷல் கபில ஜயம்பதி நியமிக்கப்பட்டுள்ளார்.

எயார் வைஷ் மார்ஷலாக இருந்த அவர் எயார் மார்ஷல் தரத்திற்கு உயர்த்தப்பட்டு, விமானப்படையின் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

இலங்கை விமானப்படையின் தளபதியாக பதவி வகிக்கும் ககன் புளத்சிங்களவின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது.

கொழும்பு நாலந்தா கல்லூரியின் பழைய மாணவரான கபில ஜயம்பதி 1982 ஆம் ஆண்டு விமானப்படையில் இணைந்து கொண்டார்.

அன்று தொடக்கம் இலங்கை விமானப்படையில் பல்வேறு பதவிகளை கபில ஜயம்பதி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும் அருகே கொள்ளையர்கள் – அநுரகுமார எடுத்துரைப்பு..!

wpengine

ஷானி மற்றும் விஜேதாச ஆணைக்குழு முன்னிலையில்

wpengine

உயர் தர விடைத்தாள் திருத்தும் பணிக்கான கட்டணங்கள் வழங்காதவிடத்து ஆசிரியர்கள் தொழிற்சங்க நடவடிக்கைக்கு…

wpengine