உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் தாஜுதீன் இனது காணாமல் போன உடல் உறுப்புகள் மறைக்கப்பட்டுள்ள இடம் வெளிச்சத்திற்கு..

றகர் வீரர் வஸீம் தாஜுதீன் இனது உடலுறுப்புகள் சில மாலபே தனியார் வைத்திய கல்லூரிக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக இன்று(21) பொலிசார் நீதிமன்ற முன்னிலையில் அறிக்கை விடுத்துள்ளனர்.

தாஜுதீன் வழக்கு இன்று வாதத்திற்கு எடுத்துக் கொண்ட போதே, பொலிசார் இவ்வாறு தெரிவித்துள்ளனர். தாஜுதீன் இனது உடலுறுப்புகள் காணாமல் போன சம்பவம் குறித்து கொழும்பு, முன்னாள் நீதிமன்ற வைத்திய அதிகாரி ஆனந்த சமரகோன் இடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பிரகாரம், கொழும்பு நீதிமன்ற வைத்திய அலுவலகத்தில் பணிபுரியும் சிலரிடம் விசாரணை மேற்கொண்டபோது, வைத்தியர் ஆனந்த சமரகோன் ஓய்வு பெற சில நாட்களுக்கு முன்னர் குளிர்சாதன பெட்டியில் இருந்த உடலுறுப்புகள் சுமார் 15 பொதிகளை அவரது வாகனத்தில் ஏற்றிச் சென்றதாகவும் அங்குள்ள ஊழியர்கள்  தெரிவித்துள்ளனர்.

அதுகுறித்து விசாரிக்கையில், குறித்த உடற்பாகங்கள் மாலபே தனியார் வைத்தியசாலைக்கே எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சுகாதார ஆலோசனைகளை சில நிறுவனங்கள் மறுப்பு

wpengine

அமித் வீரசிங்க தொடர்ந்தும் விளக்கமறியலில்

wpengine

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் மீளவும் ரங்கன ஹேரத் முன்னிலையில்..

wpengine