உள்நாட்டு செய்திகள்

வரவு செலவுத் திட்டத்தில் வாகன வரிகளில் எவ்வித மாற்றமுமில்லை – நிதியமைச்சர்

இரண்டு ஆண்டுகளுக்கு வாகன வரிகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என நிதி அமைச்சர் கூறியதாக வாகன இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு செலவுத் திட்டத்தில் வாகன விலைகளில் எவ்வித மாற்றமும் இருக்காது என நிதி அமைச்சர் கூறியதாக சங்கத்தின் தலைவர் இந்திக்க சம்பத் மெரஞ்சிகே தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(21) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,

வாகன இறக்குமதி தொடர்பில் தற்போது அமுல்படுத்தப்படும் வரி எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் குறைக்கப்படும் என சிலர் வெளியிடும் தகவல்களில் உண்மையில்லை.

இரண்டு ஆண்டுகள் வரையில் வாகன இறக்குமதி வரியில் மாற்றமிருக்காது என நிதி அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

எதிர்வரும் வரவு செலவுத்திட்டத்தில் வாகன விலைகள் குறைவடையும் என செய்யப்படும் பிரச்சாரங்களினால், வாகன சந்தையில் ஸ்தீரமற்ற தன்மை ஏற்பட்டுள்ளது.

வரி அறவீடு தொடர்பில் தற்போது நிலவி வரும் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு அமைச்சரிடம் கோரியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ஜனாதிபதியின் பரிந்துரையினை இன்று(07) கூடிய அரசியலமைப்பு பேரவை ஏகமனதாக அனுமதி..

wpengine

கலாநிதி லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸின் இறுதிக் கிரி​யைகள் அரச மரியாதையுடன்…

wpengine

கந்தான, மஹாபாகே ஆகிய பகுதிகள் முடக்கம்

wpengine