உள்நாட்டு செய்திகள்

இன்று முதல் அரச வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிச்சைகள் ஸ்தம்பிதம்..

அரச வைத்தியசாலைகளில் மேற்கொள்ளப்படுகின்ற இருதய அறுவை சிகிச்சைகள் இன்று(27) முதல் பாதிக்கப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

அரச வைத்தியசாலைகளின் இருதய கண்காணிப்பு சேவையாளர்கள் இன்று முதல் சேவைப் புறக்கணிப்பை மேற்கொள்கின்றனர்.

கடந்த வரவு செலவுத்திட்டத்தில் கூறப்பட்ட படி 10 ஆயிரம் ரூபாய் வேதன உயர் மற்றும் மேலதிக நேர கொடுப்பனவுகள் வழங்கப்படாமைக்கு எதிராக குறித்த இந்த போராட்டம் நடத்தப்படுகிறது.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கராப்பிட்டிய போதனா வைத்தியசாலை மற்றும் கண்டி பொது வைத்தியசாலை ஆகியவற்றில் இந்த சேவைப் புறக்கணிப்பு இடம்பெறுகிறது.

இந்த வைத்தியசாலைகளில் நாளாந்தம் 16 இருதய அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்ற போதும், இன்று காலை முதல் ஒரு அறுவை சிகிச்சையும் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விமல் வீரவன்சவின் கருத்தை முற்றாக மறுக்கிறார் அமெரிக்க தூதுவர்

News Editor

இந்திய விமானியை பாகிஸ்தான் பாதுகாப்பாக இந்தியாவுக்கு ஒப்படைத்தது..

wpengine

உயர் போஷாக்கை கொண்ட அரிசியை மாணவர்களுக்கு வழங்க நடவடிக்கை

wpengine