உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

இந்திய தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கு பாகிஸ்தானில் தடை..

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது அதிரடி தாக்குதல் நடாத்தப்பட்டதனை தொடர்ந்து இந்தியா தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கு பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் இடம்பெறும் முறுகல் நிலையினை அடுத்து இந்தியா திரைப்படங்கள் எதையும் பாகிஸ்தான் நாட்டில் ஒளிபரப்பவும் அந்நாட்டு திரையரங்கங்களுக்கு தடைவிதித்துள்ளது.

பாகிஸ்தானிலிருந்து ஒளிபரப்பாகும் இந்திய அலைவரிசையான கேபல் தொலைக்காட்சி அலைவரிசைக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி ஒளிபரப்பாகும் பட்சத்தில் தகுந்த தண்டனை விதிக்கப்படும் எனவும் அந்நாட்டு ஊடகத்துறை அமைச்சு சிவப்பு சமிஞ்சை விடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடும் நாட்டு மக்களும் பல தசாப்த காலமாகக் கண்ட நல்ல கனவுகள் நனவாகும்

Azeem Kilabdeen

நீரிழிவு நோயாளர்கள் பாவிக்கும் உபகரணங்களது விலைகளை நிர்ணயிக்க அரசு நடவடிக்கை…

wpengine

ஶ்ரீ.சு.கட்சியில் இருந்து ஜனாதிபதி வேட்பாளர்

wpengine