உள்நாட்டு செய்திகள்

ஜோதிடர் சுமணதாசவிடம் FCID எட்டு மணி நேர விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் முன்னாள் ஜோதிடர் சுமணதாச அபயகுணவர்தனவிடம் சுமார் எட்டு மணித்தியாலங்கள் பொலிஸார் நேற்று விசாரணை நடத்தியுள்ளனர்.

நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் இந்த விசாரணைகளை நடத்தியுள்ளதாக தெரியவருகின்றது.

ராஜபக்ஷ குடும்பத்தின் வீடுகள், காணிகள், தோட்டங்கள், சொத்துக்கள் மற்றும் ராஜபக்ஷ குடும்பத்தினருடன் நெருக்கமானவர்களினால் மேற்கொள்ளப்பட்ட மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இக்கட்டிடங்களுக்கான  ஜோதிட ஆலோசனைகளை  சுமணதாசவிடமிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த விசாரணைகளின் போது சுமணதாச பல்வேறு முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளதாக நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

நேற்று காலை 9.00 மணி முதல் சுமணதாசவிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

அடுத்த கட்ட விசாரணை பிறிதொரு நாளில்  நடத்தப்பட உள்ளதாக பொலிஸார் மேலும் அறிவித்துள்ளனர்.

Related posts

இடைநிறுத்தப்பட்ட வெடிப்பொருட்கள் விநியோகிக்கும் செயற்பாடுகள் மீளவும் ஆரம்பம்

wpengine

அனைத்துத் தேசிய பூங்காக்களிலும் வழமைப்போல் பார்வையிட அனுமதி…

wpengine

தபால்மா அதிபர் – பந்துல குணவர்தன இன்று விசேட கலந்துரையாடல்

wpengine