உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வஸீம் கொலை – ஆனந்த சமரசேகர மேல் நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல்.

முன்னாள் சட்ட வைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகர கொழும்பு மேல் நீதிமன்றத்தில்  முன்பிணை மனுவொன்றினை தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவினை இன்று(06) நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளார்.

ஆனந்த சமரசேகர  ஏலவே கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்பிணை மனு தாக்கல் செய்திருந்த நிலையில், குறித்த மனுவினை கொழும்பு மேலதிக நீதவான் துலானி அமரசிங்க நிராகரித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

றக்பி வீரர் வஸீம் தாஜுதீன் உடற் பாகங்கள் காணமல் போன விடயம் தொடர்பில் தன்னை பொலிஸார் கைது செய்யாமல் இருப்பதற்காக குறித்த முன்பிணை  கோரிக்கையை ஆனந்த சமரசேகர  நீதிமன்றில் சமர்ப்பித்துள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.

Related posts

அநுராதபுர நகராதிபதிக்கு விளக்கமறியல்

wpengine

‘கல்யாணி பொன் நுழைவு’ இன்று மக்களுக்கு

wpengine

வெப்பமான காலநிலை 02 மாதங்கள் நிலவும்…

wpengine