உள்நாட்டு செய்திகள்

வளிமண்டல திணைக்களத்தினால் பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை.

நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வளிமண்டவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுவரை வரட்சியை தோற்றுவித்த காலநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்பொழுது இடைப்பருவ பெயர்ச்சி ஆரம்பமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் நாட்டில் பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் திடீரென காற்று வீசி இடி, மின்னல் தாக்கம் ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.

இவ்வாறு ஏற்பட்டுள்ள திடீர் மற்றத்தினால் பொதுமக்களுக்கு சேதங்களை ஏற்படுத்தக்கூடிய சூழ்நிலை ஏற்படும். இதனால் பொதுமக்களை அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

தியதலாவ குண்டு வெடிப்பு – இராணுவ அதிகாரி கைது…

wpengine

தலதா கண்காட்சி தொடர்பில் பரவிவரும் போலி விளம்பரம்

Azeem Kilabdeen

அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

wpengine