உலக செய்திகள்உள்நாட்டு செய்திகள்

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் கொலை தொடர்பில் சென்னையிலும் முற்றுகை போராட்டம்..

இலங்கையில் யாழ்.பல்கலைக்கழக தமிழ் மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்து மே17 இயக்கம் சார்பில் சென்னையில் இலங்கை தூதரகம் முன்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் 2 பேர் இலங்கை பொலிஸாரால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து வட மாகாணத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் தமிழகத்திலும் முற்றுக்கை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக மே17 இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த முற்றுகை போராட்டத்தின் போது இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டன.

தமிழர்கள் மீதான தாக்குதலை நிறுத்தாவிட்டால் தொடர்ந்து இலங்கை தூதரகம் முன் முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என மே17 இயக்கத்தினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

Related posts

புதிய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் நிஷாந்த

wpengine

நடுரோட்டில் தடம் புரண்ட வாகனம்

Azeem Kilabdeen

பிஜி தீவில் நிலநடுக்கம் – 6.7 ரிக்டரில் பதிவு…

wpengine