உள்நாட்டு செய்திகள்

உயிரிழந்த பல்கலை மாணவர்களுக்கு நஷ்டஈடு வழங்குவதாக ஜனாதிபதி தெரிவிப்பு.

யாழ் பல்கலைக்கழக உபவேந்தர், பிரதான பேராசிரியர்கள் மற்றும் மாணவ பிரதிநிதிகள் இணைந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து, அண்மையில் அப்பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த இந்த சந்திப்பின்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில், பிரேதப் பரிசோதனை அறிக்கையை விரைவில் தயாரிக்க சட்டமா அதிபரால் பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதற்கு இணங்க, அதனை பெற்றுக் கொண்டு குறித்த மாணவர்களின் குடும்பங்களுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரோஸி சேனாநாயக்கவின் அடிப்படை உரிமை மீறல் மனு மார்ச் 16ம் திகதி பரிசீலனைக்கு

wpengine

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் மீண்டும் தாயகம் திரும்பினர்…

wpengine

எல்லை நிர்ணய அறிக்கை அடுத்த வாரம் வர்த்தமானியில்… ஜுலை மாத இறுதிக்குள் தேர்தல்…

wpengine