உள்நாட்டு செய்திகள்

வெலேசுதா உள்ளிட்ட போதைப் பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேரின் சொத்துக்களை அரசுடமையாக்க விசாரணை..

போதைப் பொருள் வர்த்தகர்கள் ஐந்து பேரின் சொத்துக்களை அரசுடமையாக்குவது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(05) உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்;

கைது செய்யப்பட்டுள்ள பிரதான ஐந்து போதைப் பொருள் வர்த்தகர்கள் மற்றும் முகவர்களின் சொத்துக்களை அரசுடமையாக்குவது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெலே சுதா, மொஹமட் மகீம், மொஹமட் சித்திக், நஜூமுதீன் மொஹமட் சபுக், சருக்காலி கங்கானம்கே ஒஸ்டின், தேவகெ நிலான் சாமர ஆகியோரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் புத்திக்க பத்திரண எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எமில் மற்றும் ரங்கஜீவ தொடர்ந்தும் விளக்கமறியலில்..

wpengine

பிரதமர் பற்றி கருத்துக் கூறி அமரவீர ஜனாதிபதிக்கு கடிதம்…

wpengine

ஹிருணிகாவிற்கு பிடியாணை

Azeem Kilabdeen