உலக செய்திகள்

தமிழீழ விடுதலைப் புலிகளின் மீதான தடையை நீக்குமாறு ஒபாமாவிடம் கோரிக்கை..

அமரிக்காவில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை நீக்க வேண்டும் என கோரி ஜனாதிபதி பராக் ஒபாமாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது.

விடுதலைப்புலிகள் தடைக்கு உட்பட்டுள்ளமையால், தமிழர்கள் பாதிப்புக்கு உள்ளாவதாகவும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

விடுதலைப்புலிகளின் தடைக்காரணமாக, அமரிக்காவில் உள்ள தமிழர்கள், வெளிநாடுகளுக்கு சென்று நாடு திரும்பும்போது அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர்

பல மணிநேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

இந்தநிலையில் கிறிஸ்மஸ் தினங்களில் தமிழர்களுக்கு சிறிய நிவாரணமாக ஒபாமா, விடுதலைப்புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்கவேண்டும் என்று ஒபாமாவுக்கான தமிழர் அமைப்பு கேட்டுள்ளது.

Related posts

மீண்டும் புதிய ஏவுகணைகள் தயாரிக்கும் வடகொரியா- அமெரிக்கா குற்றச்சாட்டு…

wpengine

பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா உருவப்படம் திறப்பு…

wpengine

அகதிகள் படகு கடலில் மூழ்கி விபத்து – 94 பேர் பலி

wpengine