உள்நாட்டு செய்திகள்

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை – காவல்துறையினரின் விளக்கமறியல் நீடிப்பு..

யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவரின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்ட 5 காவல்துறையினரும் எதிர்வரும் ஜனவரி மாதம் 13 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் வீ.டி. சிவலிங்கம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் கடந்த ஒக்டோபர் 21 ஆம் திகதி பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் காவல்துறை துப்பாக்கிப் பிரயோகத்தை அடுத்து இடம்பெற்ற விபத்தில் மரணித்தமை தொடர்பில் அவர்கள் ஐந்து பேரும் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு இன்று(30) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே குறித்த 5 காவல்துறையினரதும் விளக்கமறியலில் நீடிக்கப்பட்டுள்ளது.

Related posts

சம்பள உயர்வு தொடர்பில் கலந்துரையாடல்

wpengine

அரசியல் நடவடிக்கைகளில் சிறுவர்களை பயன்படுத்த தடை…

wpengine

“எனக்கு பாதுகாப்பு தாருங்கள்”: இந்திய பிரதமரிடம் முன்னாள் அமைச்சர் அவசர கோரிக்கை

News Editor