உள்நாட்டு செய்திகள்

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் கையளிப்பு…

எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு உத்தியோகபூர்வ இல்லம் வழங்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மறைந்த ரட்ணசிறி விக்ரமநாயக்கவுக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லமே, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோரின் தலையீட்டில், பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் ஊடாக இந்த வீடு, சம்பந்தனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சம்பந்தன், எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னரே, அவருக்கு உத்தியோகபூர்வ இல்லமொன்று வழங்கப்படவுள்ளது.

அவர் தனக்கான உத்தியோகபூர்வ இல்லத்தை வழங்குமாறு பல தடவைகள் அரசாங்கத்திடம் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. எதிர்க்கட்சித் தலைவரான் இரா.சம்பந்தன், வீடு சின்னமான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

புதிய குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு ஜெனரலாக பஸன் ரத்நாயக்க

wpengine

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கான நியமனம் எதிர்வரும் மார்ச் மாத இறுதியில்…

wpengine

ஹம்பாந்தோட்டை விவகாரம் – நாடாளுமன்றில் அமைதியின்மையால் நாடாளுமன்ற அமர்வுகள் ஒத்திவைப்பு..

wpengine