உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

மீளவும் சந்தைக்கு வந்துள்ள தடை செய்யப்பட்ட க்லைபொஸ்பேட் மருந்து..

க்லைபொஸ்பேட் இரசாயன கிருமிநாசினி மருந்து இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், வேறொரு பெயரில் சந்தையில் விற்பனைக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிறுநீரக நோய் பாதிப்பினால் இந்த க்லைபொஸ்பேட் இரசாயன கிருமிநாசினி மருந்து தடை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த மருந்து வேறொரு பெயரில் சந்தைக்கு விற்பனைக்கு வந்துள்ளதாக ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் சன்ன ஜெயசுமன குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற கிருமிநாசினி பாவனை மற்றும் வேறு பல காரணங்களால் நாளாந்தம் நான்கு தொடக்கம் ஆறு பேர் வரை மரணிப்பதாகவும் அதிர்ச்சித் தகவல் ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் ஹரியான மாநிலத்தில் இருந்து கடல் மார்க்கமாக இந்த கிருமி நாசினி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

ரதுபஸ்வல வழக்கிற்கு சட்டமா அதிபர் மூவரடங்கிய நீதியரசர் குழாமினை கோருகிறது

wpengine

முன்னணியில் அமைச்சுப் பதவிகள் கிடைக்கப்போவோரின் பெயர் விபரங்கள்

wpengine

அநுராதபுரம் மாநகர சபையில் பாரிய நிதி மோசடி தொடர்பில் நால்வரை கைது செய்ய விசாரணைகள் ஆரம்பம்…

wpengine