உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

வெலிகம’யில் புதிய கைத்தொழில் வலயம், மஹிந்த அரசின் வெளிநாட்டுக் கடன் தொகை மட்டும் 3,600 டொலர் – பிரதமர்

தென் மாகாண அபிவிருத்தியின் போது வெலிகம பகுதியில் புதிய கைத்தொழில் வலயம் அமைக்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

காலி பிரதேசத்தில் நேற்று(27) இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;

பெந்தரையிலிருந்து காலி கொக்கலை வரை புதிய சுற்றுலா வலயமும் ஸ்தாபிக்கப்படும். களுத்துறை, கண்டி, திருணோகமலை, பொலநறுவை மாவட்டங்களில் கைத்தொழில் பேட்டைகள் அமைக்கப்படவுள்ளன. இதற்கான வெளிநாட்டு முதலீட்டாளர்களின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும்.

மக்களுக்கு சிறந்த பொருளாதாரத்தை ஏற்படுத்த சமகால அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது. மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக் காலத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு கடன்களின் 10 சதவீதத்தை இவ்வருட இறுதிக்குள் செலுத்துவது அவசியம் என்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்த கடன் தொகை 3,600 கோடி அமெரிக்க டொலர்களாகும் எனவும் பிரதமர் கூறியிருந்தார்.

Related posts

தீர்மானமின்றி நிறைவடைந்த அமைச்சரவை கூட்டம் (UPDATE)

wpengine

தற்காலிகமாக மூடப்படவுள்ள மேம்பாலம்

wpengine

யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் கொலை -சந்தேகநபர்களது விளக்கமறியல் நீடிப்பு.

wpengine