உள்நாட்டு செய்திகள்

முன்னாள் ஜனாதிபதியின் பிரதான பாதுகாப்பாளருக்கு எதிராக 04 வழக்குகள்…

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரியாக செயற்படும் மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அவருக்கு எதிராக சொத்து தொடர்பாக 04 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அந்த வழக்குகள் மீதான விசாரணைகள் கொழும்பு – கோட்டை மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல முன்னிலையில் இன்று(07) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதன்போது, தமது தரப்பினர் மீது இவ்வாறான குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என மேஜர் நெவில் வன்னியாராச்சியின் சட்டத்தரணி, தாக்கல் செய்த எதிர்ப்புக்கு, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு எதிர்ப்பை தெரிவித்தது.

இந்நிலையில், இந்த எதிர்ப்பு தொடர்பாக தமது எழுத்து மூலமான விளக்கத்தை சமர்ப்பிப்பதாக பிரதிவாதியின் சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, குறித்த விளக்கத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு கோட்டை மேலதிக நீதவான் தெரிவித்துள்ளார்.

Related posts

பரீட்சைகளை ஒத்திவைக்க அரசு கவனம்

wpengine

மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞனுக்கு விளக்கமறியல்

Azeem Kilabdeen

மேல் மாகாண ஆளுநர் CIDயில் முறைப்பாடு

Azeem Kilabdeen