உள்நாட்டு செய்திகள்

வன வள பாதுகாப்பு திணைக்கள காடுகளில் அகழ்வதற்காக வழங்கப்படும் அனுமதி பத்திரம் இடைநிறுத்தம்…

நாட்டில் நிலவும் சுற்றுச் சூழல் பிரச்சினை தொடர்பில் கவனத்தில் கொண்டு வன வள பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான காடுகளில் மண், மணல், சரளைக்கல் மற்றும் கருங்கல் அகழ்வதற்கான அனுமதி பத்திரம் வழங்குவது தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போது தனிப்பட்ட முறையில் மற்றும் பல்வேறு நிறுவனங்களின் ஊடாக முன்வைக்கப்பட்ட அனுமதி பத்திரங்களை பெற்று கொண்ட பின்னர் குறித்த அகழ்வுகள் இடம்பெறுவதாக வன பாதுகாப்பு திணைக்கள ஜெனரல் அனுர ஹதுருசிங்க தெரிவித்துள்ளார்.

எனினும் இனிமேல் அந்த அனைத்து தேவைகளும் அரசாங்க நிறுவனம் ஊடாக மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சரியான முறைகள் இன்றி மண், மணல், சரளைக்கல் மற்றும் கருங்கல் அகழ்வு இடம்பெறுவதாக கிடைத்த முறைப்பாடுகளுக்கு அமையவே மேற்குறித்த இத்தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

(rizmira)

Related posts

ஹிஸ்புல்லாஹ் FCID முன்னிலையில்

wpengine

திலங்க சுமதிபாலவும் இலங்கை கிரிக்கெட் நிறுவனத் தேர்தலில் களமிறக்கம்

wpengine

வடமாகாண இ.போ.சபை ஊழியர்களின் போராட்டம் கைவிடப்பட்டது..

wpengine